பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் 9
கிளை நூலகங்களில் இலவசமாக
பார்த்து கொள்வதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
கிளை நூலகங்களில் இலவசமாக
பார்த்து கொள்வதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர்
அ.பொ.சிவகுமார்
புதன்கிழமை வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்
வெள்ளிக்கிழமை (மே 9)
காலை வெளியிடப்பட உள்ள நிலையில்
தேர்வு முடிவுகளை மாவட்ட மைய
நூலகம் மற்றும் புத்தூர், வரகனேரி,
ஆலத்தூர், மணப்பாறை,
மண்ணச்சநல்லூர், லால்குடி,
துறையூர், முசிறி, தொட்டியம்
கிளை நூலகங்களில் மாணவ,
மாணவிகள் இலவசமாக பார்த்துக்
கொள்ளலாம்.
மேலும் மதிப்பெண் பட்டியலையும்
இங்கு இலவசமாக பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம். தேர்வுமுடிவுகள்
வெளியாகும் நாளிலிருந்து 3
நாள்களுக்கு மட்டுமே இச்சேவை
வழங்கப்படும் என
அச்செய்திக்குறிப்பில் அவர்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment