தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.
படிப்புகளில் சேர கடந்த 4 நாள்களில் மொத்தம் 22,267 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.
படிப்புகளில் சேர கடந்த 4 நாள்களில் மொத்தம் 22,267 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.
சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 19
அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும்
சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல்
மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.-
பி.டி.எஸ். (இரண்டு படிப்புகளுக்கும்
சேர்த்து ஒரே விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால்
போதுமானது) படிப்புகளில் சேர விண்ணப்ப
விநியோகம் கடந்த புதன்கிழமை தொடங்கியது.
முதல் நாளில் தமிழகம் முழுவதும் மொத்தம் 12,138
மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றனர்.
சனிக்கிழமையன்று (மே 17) மொத்தம் 1,655
மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றனர்.
கடந்த நான்கு நாள்களில் மொத்தம் 22,267 மாணவர்கள்
விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.
இன்று விநியோகம் கிடையாது: எம்.பி.பி.எஸ்.-
பி.டி.எஸ். விண்ணப்ப விநியோகம்
ஞாயிற்றுக்கிழமைகளில் கிடையாது.
விண்ணப்பத்தைப் பெற மே 30-ஆம்
தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்த விண்ணப்பம் மருத்துவக்
கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர கடைசி நாள்
ஜூன் 2-ஆம் தேதியாகும்.
No comments:
Post a Comment