Saturday, May 03, 2014

பொறியியல் படிப்பில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் 40%: எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு பாதிப்பு

பி.இ., பி.டெக். உள்ளிட்ட தொழிற் படிப்புகளில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

பொறியியல் படிப்புக்கு கணிதம்,
இயற்பியல் பாடங்களின் மதிப்பெண்
கணக்கிடப்படுகிறது. கடந்த
ஆண்டு அறிவிப்பின்படி, பொதுப்
பிரிவினருக்கான குறைந்தபட்ச
மதிப்பெண் 50 சதவீதம், பிற்படுத்
தப்பட்ட வகுப்பினருக்கு 45 சதவீதம்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர், சீர்மரபினருக்கு 40
சதவீதம். எஸ்சி, எஸ்டி,
வகுப்பி னருக்கு 35 சதவீதம் ஆகும்.
இந்நிலையில், அகில இந்திய
தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்
(ஏ.ஐ.சி.டி.இ.), கடந்த ஆண்டு ஓர்
உத்தரவை பிறப்பித்திருந்தது.
அதில் பொறியியல் படிப்பில்
சேருவதற்கான குறைந்தபட்ச
மதிப்பெண் 40 சதவீதமாக இருக்க
வேண்டும்
என்று கூறப்பட்டி ருந்தது. ஆனால்,
தமிழகத்தில் பொறியியல் படிப்பில்
சேர எஸ்சி,
எஸ்டி வகுப்பினருக்கு 35 சதவீத
மதிப்பெண் நிர்ணயிக்
கப்பட்டிருந்ததால் ஏஐசிடிஇ
உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில்
தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையே, பொறியியல்
படிப்பு மாணவர் சேர்க்கைப்
பணிகள் தொடங்கின. இந்த வழக்கில்
ஏஐசிடிஇ-க்கு சாதகமாக
தீர்ப்பு வந்தது. குறைந்தபட்ச
மதிப்பெண் 40 சதவீதமாக
நிர்ணயிக்கப்பட்டது செல்லும்
என்று தீர்ப்பளித்த நீதிமன்றம்,
2013-14ம் ஆண்டில் 35 சதவீத
மதிப்பெண் தகுதியுடன்
மேற்கொள்ளப்பட்ட மாணவர்
சேர்க்கைக்கு இடையூறு செய்ய
வேண்டாம்
என்று அறிவுறுத்தியது. அடுத்த
ஆண்டு (2014-15) கண்டிப்பாக 40
சதவீத மதிப்பெண்
தகுதியை பின்பற்ற வேண்டும்
என்று தமிழக
அரசுக்கு உத்தரவிட்டது.
ஏஐசிடியின் உத்தரவைத்
தொடர்ந்து, இந்த
ஆண்டு பொறியியல் மாணவர்
சேர்க்கை யில் எஸ்சி,
எஸ்டி வகுப்பின ருக்கான
குறைந்தபட்ச மதிப்பெண் ணில்
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் எஸ்சி,
எஸ்டி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்
என தெரிகிறது.

No comments:

Post a Comment