கோடை விடுமுறை முடிந்து, அரசு பள்ளிகள் வரும் 4ம் தேதி திறக்கப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி அரசு பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
கடும் வெயில் காரணமாக, கோடை விடுமுறை நீடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் ஜூன் 4ம் தேதி அரசு பள்ளிகளை மீண்டும் திறப்பது என பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.
அன்றைய தினமே, பெரும்பாலான தனியார் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்க 3 நாட்களே உள்ளதால், அரசு பள்ளிகளில் இலவச சீருடை, புத்தகங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை முடுக்கி விட்டுள்ளது.
No comments:
Post a Comment