Saturday, May 24, 2014

தமிழகம் முழுவதும் 887 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நேற்று காலை வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 887 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 482 அரசு பள்ளிகள் தான் 100 சதவீதம்
தேர்ச்சி பெற்றிருந்தது. இது கடந்த
ஆண்டை காட்டிலும் சுமார்
இரு மடங்கு அதிகரித்துள்ளது. அதே போல்
இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 470
மதிப்பெண்களுக்கு மேல் 7,121 மாணவ–
மாணவிகள் அரசு பள்ளிகளில்
எடுத்துள்ளனர். மேலும் 400
மதிப்பெண்களுக்கு மேல் 88,840 மாணவ–
மாணவிகள் பெற்றுள்ளனர். இந்த
தகவலை அரசு பள்ளி கல்வித்துறை
இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன்
தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment