மதுரை மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில் 92.34 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழை முதல்பாடமாக கொண்டு தேர்வு எழுதியவர்களில், சிஇஓ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி லலிதா 1186 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், ஜெயின் வித்யாலாயா பள்ளி மாணவி காவ்யா 1185 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், செயின்ட் ஜோசப் பள்ளி மாணவி ரக்ஷ்னா 1183 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடமும் பிடித்துள்ளனர்.
பிறமொழியை முதல்பாடமாக கொண்டு தேர்வு எழுதியவர்களில் ஜீவனா பள்ளி மாணவன் சிவராம், பிரெஞ்ச் மொழியை முதற்பாடமாக கொண்டு தேர்வு எழுதி 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இதேபோல் ஜெயின் வித்யாலா பள்ளி மாணவி நிஷா, சமஸ்கிருத மொழியை முதற்பாடமாக கொண்டு தேர்வு எழுதி 1185 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

No comments:
Post a Comment