லோக்சபா தேர்தல் நடத்தை விதி, வரும், 28ம் தேதி வரை, அமலில் இருப்பதால்,
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் திட்டத்தின், டெண்டர் விடும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளன.
அதனால்,பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் திட்டத்தின், டெண்டர் விடும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளன.
கடந்தாண்டு போல், மாணவர்கள்,
பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிய பரிதாப
நிலை ஏற்பட்டு உள்ளது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில்,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களின்
கல்விக்காக, விலையில்லா நோட்டு புத்தகம்,
நான்கு செட் சீருடை, புத்தகப்பை, காலணி, வரைபட
கிரையான், நிலவரைபட நூல், கணித உபகரணம்,
சத்துணவு, சைக்கிள், அரசு பஸ்சில் செல்ல, இலவச
பஸ் பாஸ் உள்ளிட்ட
திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில்,
இலவச பஸ் பாஸ் திட்டம் முக்கிய இடம்
பெறுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2
வரையிலான மாணவருக்கு, ஸ்மார்ட்
கார்டு முறையில், மாணவரின் விவரங்கள்
சேகரிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும்,
கோடை விடுமுறைக்கு பின்னர், ஜூன் மாதம்
பள்ளி திறந்ததும்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால்
வழங்கப்படும், பஸ் பாஸை, சம்பந்தப்பட்ட
பள்ளிகளில் வழங்கப்படும்.
இந்நிலையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் பஸ்
பாஸ், அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம்,
டெண்டர் விடப்பட்டு தயாரிக்கப்பட வேண்டும்.
ஆனால், லோக்சபா தேர்தல் நடத்தி விதி, வரும், 28ம்
தேதி வரை அமலில் உள்ளதால்,
நடப்பு கல்வி ஆண்டில், வரும், ஜூன், 2ம்
தேதி பள்ளி திறக்கும் போது, மாணவருக்கு பஸ்
பாஸ் வழங்கப்படுமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
மேலும், மே, 28ம் தேதிக்கு பின்னர் தான், டெண்டர்
விடப்படும் என, தெரிகிறது. அதே சமயத்தில்,
கடந்த கல்வி ஆண்டில், எவ்வித தேர்தல் விதிகளும்
இல்லாதபட்சத்திலும், பெரும்பாலான
மாணவருக்கு ஜூலை மாதம் தான், பஸ் பாஸ்
வழங்கப்பட்டது. அதனால், மாணவர்கள்
அரசு பஸ்சில், இலவசமாக பள்ளிக்கு செல்ல
முடியாத நிலை ஏற்பட்டது.
அரசு பஸ்சிலேயே கட்டணம் செலுத்தி செல்ல
வேண்டிய கட்டாயம், மாநிலம் முழுவதும்
நீடித்ததால், மாணவர்கள் பழைய பஸ் பாஸ்
அட்டையை காட்டி, அரசு பஸ்சில் பயணம்
செய்யலாம் என, உத்தரவிட்டது. வரும் மே, 28ம்
தேதி தேர்தல் நடத்தை விதிமுறை முடிந்து, அடுத்த
நான்கு நாளில், ஜூன், 2ல் பள்ளிகள் திறக்கப்படும்.
அதன், டெண்டர் விடப்பட்டு, பஸ் பாஸ் தயார்
செய்யப்பட்டு, காலதாமதத்துடன் மாணவருக்கு பஸ்
பாஸ் வந்து சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நடப்பு கல்வி ஆண்டில், 27 லட்சம் மாணவருக்கு,
இலவச பஸ் பாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளியளவில், இலவச பஸ் பாஸ் பயனாளி மாணவர்
பட்டியல் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட
போக்குவரத்துக் கழக நிர்வாகத்திடம்
ஒப்படைக்கப்பட்டது. அதுதொடர்பாக, வரும், சில
நாட்களில், கல்வித்துறை மற்றும்
போக்குவரத்து துறை அதிகாரிகள்
ஆய்வு செய்கின்றனர்.
தேர்தல் நடத்தை, மே, 28 வரை உள்ளதால், புதிய
டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்படும். கிட்டதட்ட
பள்ளி திறந்த பின்னர் தான், டெண்டர் விடப்பட்டு,
மாணவருக்கு, ஜூலை மாதத்தில் பஸ் பாஸ்
கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். அதுவரை,
பழைய பஸ் பாஸ் மூலம், மாணவர் பள்ளிக்கு செல்ல,
போக்குவரத்து துறை அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment