பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வு துறை வருகிற 23-ம் தேதி வெளியிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த
இரண்டு கல்வி ஆண்டுகளாக இழந்த
சிறப்பிடத்தை மீண்டும் பெறுமா என
மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள்
மற்றும் சமூக
ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் 10-ம்
வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம்
தேதி தொடங்கி, தொடர்ந்து ஏப்.9ம்
தேதி வரையில் நடைபெற்றது.
இத்தேர்வை விருதுநகர் வருவாய்
மாவட்டத்தில் உள்ள விருதுநகர்
கல்வி மாவட்டத்தில்- 10876 பேரும்,
ஸ்ரீவில்லிபுத்தூர்
கல்வி மாவட்டத்தில்-9928,
அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில்-9346
என மொத்தம் 30150 மாணவ, மாணவிகள்
பங்கேற்று தேர்வு எழுதினார்கள்.
எனவே இத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான
பணிகளில் தேர்வுத்துறை மும்முரமாக
மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் 1986 முதல் 2011 வரையில்
26 ஆண்டுகள் தொடர்ந்து 10-ம்
வகுப்பு தேர்வில் மாநில அளவில்
முதலிடம் பெற்று வந்தது.
அதையடுத்து, கடந்த 2011-12ல் 93.53
சதவீதமாகவும், 2012-13ல் 96.93
சதவீதமாகவும் தேர்ச்சி விகிதம்
பெற்றும் சிறப்பிடத்தை தக்க வைக்க
முடியாமல் போனது. எனவே கடந்த
இரண்டு ஆண்டுகளாக தவறவிட்ட
முதலிடத்தை பிடிப்பதற்கு மாவட்ட
கல்வித்துறை நிர்வாகம்
பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டது.
அதனால், நிகழாண்டிலும் குறிப்பிட்ட
இடத்தை தக்க வைக்குமா என மாணவ,
மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும்
சமூக ஆர்வலர்கள்
ஆகியோரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில அளவில்
சிறப்பிடத்தை பெறுவதற்காக
எடுக்கப்பட்ட
நடவடிக்கை குறித்து மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்
வி.ஜெயக்குமார் கூறியதாவது:
ஒவ்வொரு பள்ளியிலும் 100 சதவீதம்
மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற
வேண்டும் என்பதற்காக
சிறப்பு ஆசிரியர்கள் மூலம் தொடர்
பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல்,
வாசிப்பு மற்றும் படிப்பில் பின் தங்கிய
மாணவ,
மாணவிகளை கண்டறிந்து ஒவ்வொரு பாடத்திலும்
குறிப்பிட்ட மதிப்பெண்கள்
எடுத்து தேர்ச்சி பெறும்
அளவிற்கு ஆசிரியர்களால்
சிறப்பு பயிற்சி அளிக்கவும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து, மாணவ, மாணவிகளின்
திறமையை அறிந்து கொள்வதற்காக
உடனே திருப்புதல்
தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி திறனையும்
மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதனால்,
நிகழாண்டில் மாநிலத்தில்
சிறப்பிடத்தை பெறுவதற்கான
அனைத்து முயற்சிகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்
வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment