திருச்சியில், எஸ்.எஸ்.எல்.ஸி.,
பொதுத்தேர்வு தேர்ச்சி, கடந்த
ஆண்டை விட, 2.69 சதவீதம்
குறைந்துள்ளது.
திருச்சி, முசிறி, லால்குடி ஆகியபொதுத்தேர்வு தேர்ச்சி, கடந்த
ஆண்டை விட, 2.69 சதவீதம்
குறைந்துள்ளது.
கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய
திருச்சி மாவட்டத்தில், 196 அரசு பள்ளிகள், 91 அரசு உதவி பெறும் பள்ளிகள், 111 மெட்ரிக்
பள்ளிகள், 20 சுயநிதி மற்றும் பிற பள்ளிகள்
என, 418 பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளை சேர்ந்த, 20,116 மாண வர், 19,526
மாணவியர் என, 39,642 பேர் தேர்வு எழுதினர்.
இதில், 36,651 பாஸ் ஆகினர். தேர்ச்சி விகிதம்,
92.45 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட,
2.69 சதவீதம் குறைவு. கடந்த ஆண்டு தேர்ச்சி,
95.14 சதவீதமாக இருந்தது. இதனால், மாநில
அளவில்,
நான்காவது இடத்தை திருச்சி மாவட்டம்
பிடித்தது. நடப்பாண்டு, 92.45 சதவீதம்
மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், மாநில
அளவில், 16வது இடத்துக்கு, திருச்சி மாவட்டம்
தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து,
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருச்சி மாவட்டத்தில், டி.இ.ஓ., (மாவட்ட
கல்வி அலுவலர்) பணியிடம் காலியாக
இருந்தது. அதை,
தலைமை ஆசிரியர்களே கூடுதல் பொறுப்பாக
கவனித்து வந்தனர். இதனால், அந்தந்த
கல்வி மாவட்டங்களில் உள்ள
பள்ளிகளை கவனிக்க முடியாத சூழல்
ஏற்பட்டது. இதனால், தேர்ச்சி சதவீதம்
நடப்பாண்டு குறைந்தது. இவ்வாறு அவர்
கூறினார்.
No comments:
Post a Comment