புதுடெல்லி, மே, 9–
கர்நாடகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழியான கன்னடம் கட்டாயப்பாடம் என்று அரசு அறிவித்து இருந்தது.
இதை எதிர்த்து கர்நாடகாவில் உள்ள அனைத்து சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:–
ஆரம்ப பள்ளிகளில் தாய் மொழி பாடத்தை திணிப்பது என்பது குடிமக்களின் உரிமையை மீறுவதாகும்.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தாய் மொழி பாடம் கட்டாயம் என்பது பொருந்தாது. எனவே, கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்கிறோம்.
இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment