Saturday, May 31, 2014

பள்ளி திறப்பின் போது வழங்க நோட்டு புத்தகங்கள் வந்தாச்சு!

திருச்சி: கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறப்பின் போது, மாணவர்களுக்கு வழங்க, இலவச
நோட்டு, புத்தகங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும்
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, மூன்று செட்
இலவச சீருடை, நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக், காலணி, லேப்
டாப், இலவச பஸ் பாஸ்,சைக்கிள் போன்றவை இலவசமாக
வழங்கப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்து, தமிழகத்தில்,
பள்ளிகள் அனைத்தும், ஜூன், 2ம்
தேதி திறக்கப்படவுள்ளது. பள்ளிகள் திறக்கும் நாளில்,
மாணவர்களுக்கு சீருடை, பேக், நோட்டு,
புத்தகங்களை வழங்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக, தமிழ்நாடு பாடநூல் கழகத்திலிருந்து நோட்டு,
புத்தகத்தை தருவித்து, பள்ளிக்கல்வித்துறை மூலமாக,
பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது.
திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு நோட்டு, புத்தகம்,
ஜாமெண்டரி பாக்ஸ், காலணி, ஸ்கூல் பேக்
ஆகியவை வழங்கியுள்ளனர். முதல்வரின் தொகுதியான
ஸ்ரீரங்கத்தில்,
நேற்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. வில்லியம்ஸ்
ரோடு சேவா சங்கம் பள்ளியில், ஆறு முதல், 10ம்
வகுப்பு வரை படிக்கும், 1,800 மாணவிகளுக்கு தமிழ்,
ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்
புத்தகங்கள், நோட்டுகள் வந்துள்ளன.
அவை பள்ளி திறப்பின் போது,
மாணவர்களுக்கு வழங்கப்படும், என தலைமை ஆசிரியர்
தெரிவித்தார்.

No comments:

Post a Comment