Saturday, May 24, 2014

விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளமா? அரசுத் தேர்வுகள் இயக்குநர் விளக்கம்

பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள்
திருத்துவதில் மாணவர்களுக்கு தாரளம்
காட்டப்படவில்லை என அரசுத் தேர்வுகள்
இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில்
முன்னெப்போதும் இல்லாத
அளவுக்கு மாணவர்கள்
மதிப்பெண்ணை அள்ளிக் குவித்துள்ளனர்.
இதற்கு என்ன காரணம் என அரசுத் தேர்வுகள்
இயக்குநர் கே.தேவராஜனிடம் கேட்டபோது அவர்
கூறியது:
பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டின்
போது மாணவர்களுக்கு தாராளம் எதுவும்
காட்டப்படவில்லை. சரியான
விடைகளுக்கு மட்டுமே மதிப்பெண்
வழங்கப்பட்டது.
பொதுத் தேர்வுகளில் மதிப்பெண்
எடுப்பது தொடர்பாக மாணவர்கள் மத்தியில்
விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
மாணவர்கள் கடுமையாக உழைப்பதால் தேர்வில்
அதிக மதிப்பெண் எடுக்கின்றனர் என்றார்
அவர். இந்த ஆண்டு வினாத்தாள்களும் மிகவும்
எளிமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment