Sunday, May 11, 2014

கடந்த ஆண்டு பொறியியல் கட் -ஆப் மார்க் எவ்வளவு?- கல்லூரி, பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியாக வெளியீடு

கடந்தாண்டு பொறியியல் கட்- ஆப்
மார்க் பட்டியலை கல் லூரிகள்,
பாடப்பிரிவுகள், இடஒதுக்
கீடு வாரியாக அண்ணா பல்கலைக்
கழகம் வெளியிட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் சேருவ
தற்கு மே 3-ம் தேதி முதல்
விண்ணப்ப படிவங்கள் வழங்கப்
பட்டு வருகின்றன.
இதுவரை ஒரு லட்சத்து 60
ஆயிரத்துக்கும் மேற்பட்ட
விண்ணப்பங்கள் விற்
பனையாகி இருக்கின்றன.
பூர்த்தி செய்த விண்ணப்ப
படிவங்களை மே 20-ம் தேதிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கிடையே, பிளஸ்-2
தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளி யானது.
இதில், பொறியியல் படிப்புக்கான
கணிதம், இயற் பியல், வேதியியல்
பாடங்களில் 8,285 பேர் 200-க்கு 200
மதிப் பெண் எடுத்துள்ளனர். இதன்
காரணமாக இந்த
ஆண்டு பொறி யியல்
படிப்புக்கான கட் ஆப் மார்க்
அதிகரிக்கும்
என்று கல்வி யாளர்கள்
கருத்து தெரிவித்துள் ளனர்.
கடந்த ஆண்டு கட்- ஆப் மார்க்
இந்த நிலையில், பொறியியல்
படிப்புக்கு விண்ணப்பிக்கும்
மாணவ-மாணவிகளின் வசதிக் காக
அண்ணா பல்கலைக் கழகம்,கடந்த
ஆண்டு கட்- ஆப் மார்க்
விவரங்களை இணைய தளத்தில்
(www.annauniv.edu)
வெளியிட்டுள்ளது.
இதில், கல்லூரிகள், பாடப்
பிரிவுகள்,
இடஒதுக்கீடு வாரி யான கட் -ஆப்
விவரங் களை மாணவர்கள்
அறிந்து கொள்ளலாம். இதன்மூலம்,
இந்த ஆண்டு எவ்வளவு கட்- ஆப் மார்க்
வரும் என்பதை ஓரளவுக்கு ஊகிக்க
முடியும்.

No comments:

Post a Comment