Wednesday, May 28, 2014

சி.பி.எஸ்., திட்டத்தில் சேராதவர்களுக்கு சிக்கல்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ்
(கான்ட்ரிபியூட்டரி பென்ஷன் ஸ்கீம்)
கணக்கு எண் பெறாதவர்களுக்கு, வரும்
ஆகஸ்ட் 31-க்கு பிறகு சம்பளம் வழங்க,
அரசு தடை விதித்து உள்ளது.

ஏப்., 1, 2003க்கு பின் அரசு பணியில்
நியமனம் பெற்றவர்களுக்கு,
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், அரசு ஊழியர்கள்
அனைவரும், கணக்கு எண் பெற்று,
அவரவர் கணக்கில், ஒவ்வொரு மாத
ஊதியத்திலும், 10 சதவீத
தொகை பிடித்தம்
செய்யப்பட்டு வருகிறது. ஆனால்,
ஒரு சில ஊழியர்களுக்கு, 2014 மே மாத
ஊதியத்தில், பங்களிப்பு ஓய்வூதிய
திட்டத்திற்காக, எவ்வித தொகையும்
பிடித்தம் செய்யப்படாமல், சம்பள பட்டியல்
சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அரசு முதன்மை நிதித்துறை செயலகம்
அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்
கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள்
அனைவருக்கும், ஒவ்வொரு மாத
ஊதியத்திலும், ஓய்வூதிய
தொகை பிடித்தம் செய்வது கட்டாயம்.
ஆனால், ஒரு சில அரசு ஊழியர்களுக்கு,
புதிய பங்களிப்பு ஓய்வூதிய
திட்டத்தில், கணக்கு எண் பெறாததால்,
ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படவில்லை.
வரும் ஆகஸ்ட் 31-க்கு பின்,
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்குரிய
தொகை பிடித்தம் செய்யாமல், சம்பள
பட்டியலை வழங்க கூடாது.
மீறி வழங்கினால், அவர்களுக்கு அதன்
பிறகு சம்பளம் வழங்கப்பட மாட்டாது.
அனைத்து துறைகளிலும், சம்பளம்
பெற்று வழங்கும் அலுவலர்கள், தங்கள்
அலுவலகத்தில் பணிபுரியும்,
கணக்கு எண் பெறாத
அரசு ஊழியர்களுக்கு, கணக்கு எண்
பெற
அறிவுறுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment