Friday, May 23, 2014

டி.இ.டி., சான்றிதழ் வாங்கலையா?

டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு)
சான்றிதழ் வாங்காத தேர்வர்கள்,
தங்களது விவரங்களை, ஜூன்,
7ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்'
என, டி.ஆர்.பி.,
(ஆசிரியர் தேர்வு வாரியம்)
அறிவித்து உள்ளது.அறிவிப்பு விவரம்:கடந்த,
2012, ஜூலை 12ம் தேதி, மற்றும்
அதே ஆண்டில், அக்டோபர், 14ம் தேதி நடந்த
டி.இ.டி., தேர்வில்,
தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அதற்கான
சான்றிதழ்
வழங்கப்பட்டுவிட்டது.எனினும், டி.இ.டி.,
தகுதி சான்றிதழ் கிடைக்காதவர்
யாராவது இருந்தால், அவர்கள்,
தங்களது விவரங்களை, வரும், ஜூன் 7ம்
தேதிக்குள், சம்பந்தபட்ட மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்களை சந்தித்து,
தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு,
டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment