Tuesday, May 20, 2014

பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய மெத்தனம்!கல்வித்துறை அதிகாரிகள் அசட்டை!

திருப்பூர் மாவட்டத்தில், அங்கீகாரமற்ற நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் மீது,
நடவடிக்கை எடுக்காமல், கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனம்
காட்டுகின்றனர்.
நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் கட்டடம், ஓலைக்கூரை, ஓடு, ஆஸ்பெஸ்ட்டாஸ் தகரம் போன்றவற்றால் அமைந்திருக்கக் கூடாது.
சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை பின்பற்றியிருந்தால்
மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும்.
இவ்விதிமுறைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால்
மட்டுமே அங்கீகாரம்
புதுப்பிக்கப்படும்.அங்கீகாரமற்ற பள்ளிகளில்
மாணவர் சேர்க்கையை நிறுத்தவும்,
அப்பள்ளி குழந்தைகளை, அருகில் உள்ள அங்கீகாரம்
பெற்ற பள்ளிக்கு மாற்றவும், தொடக்க
கல்வி இயக்குனரகத்தில் இருந்து, மாவட்ட தொடக்க
கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், திருப்பூர் மாவட்டத்தில்,
இந்நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம்
காட்டாமல் மெத்தனமாக உள்ளனர்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்
வனமூர்த்தியிடம் கேட்டபோது,""அங்கீகாரம் பெறாத
பள்ளிகள் மீதான நடவடிக்கை குறித்து இன்னும்
முடிவெடுக்கவில்லை.
முதன்மை கல்வி அலுவலரின்
கவனத்துக்கு கொண்டு சென்று,
@மல்நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment