Tuesday, May 13, 2014

மதிப்பெண் பட்டியல், 'டிசி'க்காக காத்திருக்க வேண்டாம்: அண்ணா பல்கலை வேண்டுகோள்

பி.இ.,க்கு விண்ணப்பிக்க, மாற்றுச்
சான்றிதழான, 'டிசி' மற்றும் மதிப்பெண் பட்டியலுக்காக, மாணவர்கள் காத்திருக்க வேண்டாம்.
 இரண்டும் இல்லாமலும், பி.இ.,
விண்ணப்பத்தை அனுப்பலாம்,'' என,
பி.இ., சேர்க்கை செயலர், ரைமண்ட்
உத்திரியராஜ் தெரிவித்தார்.
பி.இ., படிப்பில் சேர, கடந்த
ஒரு வாரத்தில், 1.68 லட்சம்
விண்ணப்பங்கள்,
விற்பனையாகி உள்ளன.
'விண்ணப்பத்துடன், பிளஸ் 2
மதிப்பெண் பட்டியல், 'டிசி'
ஆகியவை இணைக்க வேண்டும்' என,
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய
கடைசி நாள், மே 20ம் தேதி. ஆனால்,
வரும் 21ம் தேதி தான், மதிப்பெண்
பட்டியல் வழங்கப்படுகிறது. மேலும்,
மதிப்பெண் பட்டியல் வழங்கும்போது,
'டிசி'யையும் சேர்த்து வழங்க,
பள்ளிகள் திட்டமிட்டு உள்ளன.
இதனால், இந்த இரு சான்றிழ்களும்
இல்லாமல், 20ம் தேதிக்குள்,
விண்ணப்பத்தை அனுப்பலாமா என,
மாணவர்கள் குழப்பம்
அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அண்ணா பல்கலை, பி.இ.,
சேர்க்கை செயலர், ரைமண்ட்
உத்திரியராஜ் கூறியதாவது:
இணையதளத்தில்
இருந்து எடுக்கப்பட்ட
தேர்ச்சி பட்டியலை,
விண்ணப்பத்துடன்
இணைத்து அனுப்பினால் போதும்.
மதிப்பெண் பட்டியலை பெற்றபின்,
அதன் நகலை, தபால் மூலம்,
அண்ணா பல்கலைக்கு அனுப்ப
வேண்டும். நாங்களும், தேர்வுத்
துறை இயக்குனரகத்தில் இருந்து,
'சிடி' பெற்று, மதிப்பெண் சரியாக
உள்ளதா என்பதை பார்ப்போம்.
மதிப்பெண் பட்டியல்
நகலை அனுப்பும்போது, அதன் மேல்
பகுதியில், பி.இ., விண்ணப்ப
எண்ணை குறிப்பிட வேண்டும்.
அப்போது தான், குறிப்பிட்ட
விண்ணப்பத்துடன், மதிப்பெண்
பட்டியல் நகலை, எங்களால் இணைக்க
முடியும். 'டிசி'க்காகவும், மாணவர்
காத்திருக்க தேவையில்லை.
மதிப்பெண் பட்டியல்
நகலை அனுப்பும்போது, 'டிசி'
நகலையும்,
சேர்த்து அனுப்பலாம்.இந்த
இரு சான்றிதழுக்காக, பி.இ.,
விண்ணப்பம் அனுப்புவதில், கால
தாமதம் செய்ய வேண்டாம்.
மாணவர்கள், உடனடியாக
விண்ணப்பத்தை அனுப்பலாம்.
மாணவர்கள், கல்லூரி மற்றும் பாட
பிரிவை தேர்வு செய்வதில்,
தீர்க்கமான முடிவை எடுக்க
வேண்டும். அப்படி எடுத்தபின்,
படிப்பில், ஆழ்ந்த கவனத்துடன்
செயல்பட்டு, நன்றாக படித்தால்,
கண்டிப்பாக
வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு, ரைமண்ட் தெரிவித்தார்.

No comments:

Post a Comment