Monday, June 16, 2014

பிளஸ் 1 வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்

தமிழகத்தில் பிளஸ் 1
மாணவர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16 முதல் வகுப்புகள் தொடங்குகின்றன.

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26
முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது.
அதைத்
தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டது.
மே 23-ஆம் தேதி தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டன.
இதையடுத்து 11-ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு திங்கள்கிழமை (
ஜூன் 16) முதல் வகுப்புகள் தொடங்கவுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும்
மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் அவரவர்
பள்ளிகளிலேயே திங்கள்கிழமை முதல்
வழங்கப்படும்.
தனியார் பள்ளிகள் பாடநூல் கழக
குடோன்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்
என்ற அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில
தனியார் பள்ளிகள் பாடப்
புத்தகங்களை பெற்றுக் கொண்டுள்ளன.

No comments:

Post a Comment