Sunday, June 15, 2014

11-ஆம் வகுப்பு புத்தகங்கள்: நாளை முதல் விற்பனை

பதினோராம் வகுப்பு தனியார்
பள்ளி மாணவர்களுக்கான பாடப்
புத்தகங்கள் திங்கள்கிழமை முதல்
பாடநூல் கழக, விற்பனைப் பிரிவில்
கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திங்கள்கிழமை 11-ஆம் வகுப்புகள்
தொடங்க உள்ளன. அரசு மற்றும்
அரசு உதவி பெறும்
பள்ளி மாணவர்களுக்கான இலவச பாடப்
புத்தகங்கள்
பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு அவை
திங்கள்கிழமை முதல் வழங்கப்படும்.
தனியார் பள்ளிகள் பாடநூல் கழக
குடோன்களில் இருந்து பெற்றுக்
கொள்ளலாம் என்ற அறிவிப்பைத்
தொடர்ந்து சில தனியார் பள்ளிகள்
பாடப்
புத்தகங்களை பெற்று கொண்டுள்ளன.
பல பள்ளிகளில்
மாணவர்களே புத்தகங்களை வாங்கிக்
கொள்ளுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் பெற்றோர்களும், மாணவ -
மாணவிகளும் பாடநூல் கழகம் மற்றும்
டிபிஐ அலுவலகத்துக்கு சென்றும்
புத்தகங்கள் கிடைக்காமல்
ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
இது குறித்து பாடநூல் கழக அதிகாரி,
"அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான
புத்தகங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
மேலும் தனியார்
பள்ளிகளுக்கு தேவையான
புத்தகங்களை குடோன்களில்
இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
திங்கள்கிழமை முதல் பாடநூல் கழக,
விற்பனைப் பிரிவில் பாடப்
புத்தகங்கள் கிடைக்கும். சென்ற
ஆண்டு விற்ற அதே விலையில்
கிடைக்கும்' என தெரிவித்தார்.

No comments:

Post a Comment