Saturday, June 28, 2014

கவுன்சிலிங்'கில் எதிர்பார்த்தது 190; காட்டியது 12 மட்டுமே!

மதுரையில், 190 காலி இடங்களை எதிர்பார்த்து பங்கேற்ற
'கவுன்சிலிங்'கில், 12 இடங்கள் மட்டும்
காண்பிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல்
கலந்தாய்வு இளங்கோ மாநகராட்சி பள்ளியில்
நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு,
மையத்திற்கு 600 ஆசிரியர்கள் குவிந்தனர்.
மதியம் 1 மணிக்கு தான் 'ஆன்லைனில்'
காலியிட விவரம் காண்பிக்கப்பட்டது.
ஜூன் 26ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடந்த
பணிநிரவல் 'கவுன்சிலிங்'கில், 26 பேர்
பங்கேற்றபோது, 2014-15
கல்வியாண்டிற்கு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட
216 இடங்கள் காலியிடங்களாக
காண்பிக்கப்பட்டன.இதனால், 26
ஆசிரியர்களும்,
வெளி மாவட்டங்களுக்கு செல்லாமல்
உள்ளூரிலேயே பணி நியமனம் பெற்றனர்.
இந்நிலையில், நேற்று நடந்த
பொதுமாறுதலிலும், அந்த
கூடுதல் பணியிடங்கள் காண்பிக்கப்படும்
என்ற எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்
பங்கேற்றனர். ஆனால், அப்பணியிடங்கள்
காண்பிக்கப்படவில்லை.மாறாக, ஆங்கிலம் 3,
அறிவியல் 1, சமூக அறிவியலில் 8 இடங்கள்
என மொத்தம் 12 காலியிடங்கள்
மட்டுமே காண்பிக்கப்பட்டன. தவிர
சிறப்பாசிரியர் பிரிவில் ஓர்
உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும்
காட்டப்பட்டன.
தமிழ், கணிதப் பாடங்களில் ஒரு இடமும்
காட்டவில்லை. இதனால்,
முதன்மை கல்வி அலுவலர்
ஆஞ்சலோ இருதயசாமியிடம் ஆசிரியர்கள்
முறையிட்டு மையத்தை விட்டு
வெளியேறினர்.ஆஞ்சலோ இருதயசாமி
கூறுகையில், "மாவட்டத்தில் தமிழ், கணிதம்
தவிர்த்து பிற பாட ஆசிரியர்
காலி பணியிடங்கள் காண்பிக்கப்பட்டு, 42
பேருக்கு பணியிட மாறுதல் உத்தரவுகள்
வழங்கப்பட்டுள்ளன," என்றார்.ஆசிரியர்கள்
கூறுகையில், "கூடுதல்
பணியிடங்களுக்கு அங்கீகாரம் வழங்கி,
ஆசிரியர்களை நியமிக்கும்போது இந்த
'கவுன்சிலிங்'கில் பங்கேற்று ஏமாந்த
ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்
'சிறப்பு கவுன்சிலிங்' நடத்த வேண்டும்,"
என்றனர்.

No comments:

Post a Comment