அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 398 ஆசிரிய பயிற்றுனர்களை, பணிநிரவல் மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மாநிலம் முழுவதும், அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மையங்களில், ஆசிரிய பயிற்றுனர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில்,
திண்டுக்கல், மதுரை, தேனி,
விருதுநகர் உட்பட, 13 மாவட்டங்களில், 398
பேர் உபரியாக உள்ளனர். இவர்களை,
பணிநிரவல் மூலம், காலியாக உள்ள, மற்ற
மாவட்டங்களுக்கு இடம் மாற்றம் செய்ய,
கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தற்போது, சிவகங்கை, ராமநாதபுரம்,
கோவை, தருமபுரி உட்பட, 14
மாவட்டங்களில், 398 பணியிடங்கள்
காலியாக உள்ளன. உபரியாக உள்ள
ஆசிரிய பயிற்றுனர்கள், அந்தந்த, மாவட்ட
முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சென்று,
'ஆன் - லைனில்' விண்ணப்பிக்க
அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
பணிநிரவல் நடவடிக்கைக்கு, ஆசிரிய
பயிற்றுனர்கள்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment