Thursday, June 05, 2014

7 மருத்துவ கல்லூரிக்கு புதிய 'டீன்'கள் நியமனம்

தமிழகத்தில், ஏழு மருத்துவக்
கல்லூரிகளுக்கு புதிதாக, 'டீன்'கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து பேராசிரியர்கள்,
பதவி உயர்வின் மூலம், டீன்
பொறுப்புக்கு வந்துள்ளனர்.
தர்மபுரி டீனாக இருந்த
ராஜபில்லிகிரகாம், செங்கல்பட்டு டீனாக
மாற்றப்பட்டுள்ளார். வேலூர் டீனாக
இருந்த துளசிராம்,
நெல்லைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ராயப்பேட்டை மருத்துவனை கண்காணிப்பாளர்
குணசேகரன், கீழ்ப்பாக்கம்
மருத்துவக்கல்லூரி டீனாகவும்,
கீழ்ப்பாக்கம் குழந்தைகள்
பிரிவு துறைத் தலைவர்
நாராயணபாபு,
திருவண்ணாமலை டீனாகவும்
நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர்
பேராசிரியர் சாந்திமலர்,
தருமபுரி டீனாவும்,
திருவண்ணாமலை பேராசிரியர்
சிக்தி அக்தியா முனர்வா, வேலூர்
டீனாகவும், ஸ்டான்லி பேராசிரியர்
உஷா சதாசிவம், விழுப்புரம் டீனாகவும்
மாற்றப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment