திட்டமிட்டபடி தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள்
திறக்கப்படுகின்றன.
மொத்தம் 90 லட்சம்திறக்கப்படுகின்றன.
மாணவர்களுக்கு வழங்க
புத்தகங்கள்
மற்றும் சீருடைகள் தயார் நிலையில் உள்ளன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளுக்கு இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் நாளை திறப்பு
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் கீழ்
செயல்படும் பள்ளிகளில், ஆண்டு இறுதித்
தேர்வு முடிந்து ஏப்ரல் மாதம் 23–ந் தேதி முதலும்,
தொடக்க கல்வித் துறையின் கீழ் உள்ள
பள்ளிகளுக்கு மே மாதம் 1–ந் தேதி முதலும்
கோடை விடுமுறை விடப்பட்டது.
ஒரு மாத கால கோடை விடுமுறைக்கு பின்னர்,
2014–2015–ம் கல்வி ஆண்டில்,
அனைத்து பள்ளிகளும் நாளை (திங்கட்கிழமை)
திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனால், கொளுத்தும் வெயில் காரணமாக பள்ளிகள்
திறப்பது சில நாட்கள் தள்ளிப்போகும்
என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,
திட்டமிட்டபடி பள்ளிகள்
நாளை திறக்கப்படுகின்றன.
பள்ளி திறக்கும்
நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும்
புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்க
அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
4 கோடி பாடப்புத்தகங்கள்
ஏற்கனவே, 1 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கு என மொத்தம் 4 கோடியே 20 லட்சம்
புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதாவது, 1 முதல்
9–ம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கு என 2
கோடியே 20 லட்சம் புத்தகங்களும், 10, பிளஸ்–1,
பிளஸ்–2 ஆகிய மாணவர்களுக்கு என 2
கோடி புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன.
தற்போது தமிழகத்தில், 1–ம் வகுப்பு முதல் பிளஸ்–
2 வரை படிக்கும் மாணவர்களில்,
அரசு பள்ளி மாணவர்கள் 57 லட்சம் பேரும்,
அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 33 லட்சம்
பேரும் என மொத்தம் 90 லட்சம் மாணவர்கள்
இருக்கிறார்கள்.
பள்ளிகளுக்கு சென்றன
பள்ளி திறக்கும் நாளான நாளையே,
மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் சீருடைகள்
வழங்குவதற்கான பணிகள் முழு வீச்சில்
நடந்து வருகின்றன. தமிழ்நாடு பாடநூல் கழகம்
சார்பில், அனைத்து பள்ளிகளுக்கும்
பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், குறிப்பிட்ட
வகுப்பு மாணவர்களுக்கு வழங்க
ஜாமெண்டரி பாக்ஸ், ஸ்கூல் பேக்,
செருப்பு உள்ளிட்டவைகளும் அனுப்பப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், சீருடைகள்
வழங்கப்படுவதை கண்காணிக்க
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள
பள்ளி கல்வி இணை இயக்குனர்
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment