தமிழகத்தில், கோடை விடுமுறை பின், நாளை (ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்படுவதால், திருச்சியில், பள்ளிகளை சுத்தப்படுத்தப்படும்
பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் நாளை ( ஜூன் 2) பள்ளிகள்
திறக்கப்படுகிறது. கடந்த, ஒன்றரை மாதங்களாக
பொதுத்தேர்வு மற்றும் கோடை காலத்தையொட்டி,
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதனால், பள்ளிகளில் வகுப்பறைகள்
பூட்டப்பட்டிருந்தது. மேலும், கடந்த ஏப்ரல் மாதம்
லோக்சபா த ேர்தலின் போது, பள்ளி வகுப்பறைகள்
ஓட்டுச் சாவடிகளாக செயல்பட்டது.
அப்போது, வகுப்பறைகளில் வேட்பாளர்கள் பெயர்,
சின்னம், முகவரி போன்ற விபரங்கள் அடங்கிய
போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும், ஆண்,
பெண் வாக்காளர்களுக்கு தனித்தனியாக
வகுப்பறைகள் பிரிக்கப்பட்டு,
துண்டு பிரசுரங்களுக்கும் பள்ளிகளில்
ஒட்டப்பட்டிருந்தது.
விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கப்படுவதால்,
லோக்சபா தேர்தலின் போது ஒட்டப்பட்டிருந்த
போஸ்டர்களை அகற்றி,
வகுப்பறைகளை சுத்தப்படுத்த வேண்டும், என
பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு,
மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில்,
நேற்று சுத்தப்படுத்தப்படும் பணி விறுவிறுப்பாக
நடந்தது.
No comments:
Post a Comment