Tuesday, June 17, 2014

கவுன்சிலிங்கில் குளறுபடி கூடாது: பள்ளிகல்வித்துறை உத்தரவு

'எந்த
குளறுபடியும் இன்றி, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க வேண்டும்,' என, மாவட்ட
முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு,
பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில்,
ஆசிரியர் பயிற்றுனர் பணிநிரவல்,
ஆசிரியர்கள் பொதுமாறுதல் மற்றும்
பதவி உயர்விற்கான கவுன்சிலிங்,
நேற்று துவங்கி, ஜூன் 29 வரை நடக்கிறது.
இதற்காக ஆசிரியர்கள், அந்தந்த
பள்ளி தலைமையாசிரியர்களின் ஒப்புதலோடு,
சம்பந்தப்பட்ட மாவட்ட
முதன்மைகல்வி அலுவலகங்களில் நேரில்
விண்ணப்பம் செய்தனர். அதற்கான
ஒப்புகை சீட்டு அவர்களிடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இக்கவுன்சிலிங்கை எந்த
குளறுபடியும் இன்றி நடத்தி முடிக்க
வேண்டும் என, மாவட்ட
முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு,
பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை உயர்அதிகாரி ஒருவர்
கூறுகையில்," கவுன்சிலிங்கிற்காக
ஆசிரியர்கள் விண்ணப்பித்தபோதே,
அவர்களது பெயர், பிறந்த தேதி, பணியில்
சேர்ந்த தேதி, தற்போதைய பணியிடம், மாறுதல்
கேட்கும் மாவட்டம், என்ன காரணம் என்பன
போன்ற பல்வேறு விபரங்கள் சேகரிக்கப்பட்டு,
கம்ப்யூட்டரில் டைப் செய்து, அவர்களிடம்
பிரின்ட் அவுட் தரப்பட்டது. அதில்
பிழை இருந்தால் திருத்தி, சரியான
விபரங்களுடன், அவர்களது விண்ணப்பம்
ஆன்லைனில் அப்லோடு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல்
தயாரிக்கப்பட்டு, கவுன்சிலிங்
நடத்தப்படுகிறது. சிபாரிசின் அடிப்படையில்
வேண்டியவர்களுக்கு மட்டும் கேட்ட இடம்
ஒதுக்கப்பட்டதாக, இதில் புகார்
எழவாய்ப்பில்லை. எனினும்,
குளறுபடியின்றி கவுன்சிலிங் நடத்தி,
மாறுதல் உத்தரவு வழங்க,
பள்ளிகல்வித்துறையால்
அறிவுரை வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.

No comments:

Post a Comment