Tuesday, June 17, 2014

'கவுன்சிலிங்'கை புறக்கணித்த ஆசிரியர் பயிற்றுனர்கள்

மதுரையில் நடந்த முதல்நாள் ஆசிரியர்
'கவுன்சிலிங்'கை பலர் புறக்கணித்தனர்.
அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை மற்றும்
மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கான
பொதுமாறுதல் 'கவுன்சிலிங்' துவங்கியது.

முதல்நாளான நேற்று ஆசிரியர்
பயிற்றுனர்களுக்கான பணிநிரவல்
நடந்தது. முதன்மை கல்வி அலுவலர்
ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார்
. மாவட்டத்தில் 67 பேர் பங்கேற்க
அழைக் கப்பட்டனர். இதில்,
முன்கூட்டியே விருப்ப மாற்றத்தில் 7 பேர்
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்
பெற்றனர். 13 பேர் மட்டும் பங்கேற்றனர்.
அவர்களுக்கு மாறுதல்
உத்தரவு வழங்கப்பட்டது. மீதமுள்ள 49 பேர்
கவுன்சிலிங்கை புறக்கணித்தனர். இதில்
சிலர், தாங்கள் பணிபுரியும் இடங்களில்
கையெழுத்து போட்டுவிட்டு சென்றனர்.
புறக்கணிப்பு ஏன்? : ஆசிரியர் பயிற்றுனர்
சங்க நிர்வாகிகள்
கூறியதாவது:எங்களுக்கு இந்தாண்டுதான்
'கவுன்சிலிங்' அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. மாணவர்
எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்
எண்ணிக்கை இல்லாத இடங்களில்
'சர்பிளஸ்' ஆக பணிபுரியும்
ஆசிரியர்களை மாற்றி 'பணிநிரவல்'
செய்வது என்பது எங்களுக்கு பொருந்தாது.
எங்களுக்கு மாணவர், ஆசிரியர்
விகிதாசாரம் என்பது இல்லை.
எங்களை ஏன் 'கவுன்சிலிங்'கில் சேர்க்க
வேண்டும்.எங்களை சேர்க்கக் கூடாது என,
ஐகோர்ட்டில் சிலர்
வழக்கு தொடர்ந்துள்ளோம். நேற்று கோர்ட்
உத்தரவு வரும் என எதிர்பார்த்து,
'கவுன்சிலிங்' நடந்த
இளங்கோ மாநகராட்சி பள்ளிக்கு
செல்லாமல், ராஜாஜி பூங்காவில்
ஆலோசித்தோம், என்றனர்.
'குழப்ப' உத்தரவு : 'கவுன்சிலிங்'கில்
பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட மாறுதல்
உத்தரவில், பணியேற்கும் 'மாவட்டம்' பெயர்
மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால்,
எந்த 'பிளாக்' என்ற விவரம் இல்லை.
இதனால், உத்தரவு குழப்பமாக இருப்பதாக
பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment