'பஸ் பாஸ் தயாரிப்பு பணி துவங்காததால்,
ஆகஸ்ட் மாதம் வரை, பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாசை பயன்படுத்திக் கொள்ளலாம்' என, போக்குவரத்துக் கழக
நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள,ஆகஸ்ட் மாதம் வரை, பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாசை பயன்படுத்திக் கொள்ளலாம்' என, போக்குவரத்துக் கழக
நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
எட்டு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 22
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள்
இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில், ஒன்றாம்
வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பள்ளிகளில்
படிக்கும் மாணவர்களுக்கு, புகைப்படத்துடன்
கூடிய, 'ஸ்மார்ட் கார்டு' ஆக, இலவச பஸ் பாஸ்
வழங்கப்படுகிறது. இந்தாண்டு, 30 லட்சம்
மாணவர்களுக்கு, பஸ் பாஸ் வழங்க
திட்டமிட்டுள்ளனர். பஸ் பாஸ் தயாரிக்கும்
நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும்
பணி மட்டுமே முடிந்துள்ளது. பஸ் பாஸ்
தயாரிக்கும் பணி துவங்கவில்லை. இன்று, தமிழகம்
முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
உடனடியாக, 30 லட்சம் பஸ் பாஸ் வழங்குவது
சாத்தியமில்லை.
ஒவ்வொரு பள்ளி நிர்வாகத்தினரும் படிப்படியாக
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, போக்குவரத்துக்
கழகங்களுக்கு அனுப்பி வைப்பர். இந்த
பணி முடியவே, சில வாரங்கள் எடுக்கும். பின்,
அவை சம்பந்தப்பட்ட
நிறுவனத்தினருக்கு வழங்கப்பட்டு, பஸ் பாஸ்
தயாரித்து வழங்க, மேலும் பல வாரங்களாகும்.
இந்நிலையில், பழைய பஸ் பாசையே, புதிய பாஸ்
வரும் வரை, மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து,
போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர்
கூறியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு படிப்படியாக பஸ் பாஸ்
வழங்குவோம். பஸ் பாஸ் பெறாதவர்கள், பயணக்
கட்டணம் செலுத்தி பஸ்சில் பயணிக்கும்
சிரமத்தை தவிர்க்கும் வகையில், ஆகஸ்ட் மாதம்
வரை, பள்ளி மாணவ, மாணவியர், பழைய பஸ் பாஸ்
பயன்படுத்தி, பஸ்சில் பயணிக்கலாம்.இதுகுறித்து,
நடத்துனர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம்.
அனைத்து கழக பஸ்களுக்கும்,
இது பொருந்தும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment