நாடு முழுவதும் உள்ள, தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் (என்.ஐ.டி.,),
கல்வி கட்டணம், இரு மடங்காக
உயர்த்தப்பட்டுள்ளது.
பி.டெக்., உள்ளிட்ட, படிப்புகளுக்கானகல்வி கட்டணம், இரு மடங்காக
உயர்த்தப்பட்டுள்ளது.
ஆண்டு கல்வி கட்டணம், 36 ஆயிரம் ரூபாயில் இருந்து, 70 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ்,
30 என்.ஐ.டி., கல்வி நிறுவனங்கள்
இயங்கி வருகின்றன. தமிழகத்தில், திருச்சியில்,
என்.ஐ.டி., இயங்கி வருகிறது. ஐ.ஐ.டி., (இந்திய
தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) போல், என்.ஐ.டி.,
கல்வி நிறுவனங்களும்,
உயர்கல்வியை அளிப்பதில்,
சிறந்து விளங்குகின்றன. பி.டெக்., எம்.சி.ஏ.,
எம்.டெக்., உள்ளிட்ட, பல உயர்கல்வி படிப்புகளை,
என்.ஐ.டி., வழங்குகிறது. வரும் கல்வி ஆண்டில்
(2014 -- 15), அனைத்து படிப்புகளுக்குமான
கல்வி கட்டணங்களை உயர்த்தி, மத்திய
அரசு உத்தரவிட்டுள்ளது. பி.டெக்., எம்.டெக்.,
உள்ளிட்ட படிப்புகளுக்கான
ஆண்டு கல்வி கட்டணம், 36 ஆயிரம் ரூபாயில்
இருந்து, 70 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிஎச்.டி.,க்கான கல்வி கட்டணம், 15 ஆயிரம்
ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. என்.ஐ.டி.,
நிறுவனங்கள்,
அரசு நிதியை எதிர்பார்ப்பதை குறைக்கும்
வகையில்,
கல்வி கட்டணங்களை மாற்றி அமைப்பது குறித்து ஆய்வு செய்ய,
முன்னாள் அணுசக்தி ஆராய்ச்சித் துறை செயலர்,
அனில் ககோத்கர் தலைமையில், முந்தைய காங்.,
அரசு, குழு அமைத்தது. இக்குழுவின்
பரிந்துரை அடிப்படையில், கல்வி கட்டணம்
உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி கட்டண உயர்வுக்கான
உத்தரவை, முந்தைய காங்கிரஸ் அரசு,
கடைசி நேரத்தில் (மே 5ம் தேதி)
வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment