பள்ளி கல்வித் துறையில்,
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் (ஒரு பள்ளியில் கூடுதலாக உள்ள
ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றுதல்)
கலந்தாய்வு, வரும், 26ம் தேதியும், தொடக்க
கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு, வரும், 18ம் தேதியும் நடக்கிறது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் (ஒரு பள்ளியில் கூடுதலாக உள்ள
ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றுதல்)
கலந்தாய்வு, வரும், 26ம் தேதியும், தொடக்க
கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு, வரும், 18ம் தேதியும் நடக்கிறது.
இரு துறைகளிலும் சேர்த்து, 3,000த்துக்கும்
அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள்,
வெளி மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர்.
சென்னை நகரில் இருந்து, 200க்கும்
அதிகமான ஆசிரியர்கள், காஞ்சிபுரம்,
திருவள்ளூர், வேலூர்
அல்லது திருவண்ணாமலை மாவட்டங்களுக்கோ,
தூக்கி அடிக்கப்படலாம்.
தவிப்பு
இந்த ஆண்டு, பணி நிரவல்
கலந்தாய்வு நடப்பது குறித்த தகவல்,
இரு மாதங்களுக்கு முன் வெளியானது.
அப்போது முதல், ஆசிரியர்கள் தூக்கம்
இன்றி தவித்து வருகின்றனர்.ஒவ்வொரு
பள்ளியிலும் கூடுதலாக உள்ள ஆசிரியரில்,
'ஜூனியர்' யாரோ, அவர் மாற்றப்படுவார்.
அரசு பள்ளிகளில், மாணவர்
சேர்க்கை குறைந்து வருவது தான்,
பணி நிரவலுக்கு காரணம் என,
கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து, அகில இந்திய
தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின்
கூட்டமைப்பு செயலர்,
அண்ணாமலை கூறியதாவது:ஆசிரியர்
நியமனத்தில், ஆட்சியாளர்களுக்கு தெளிவான
கொள்கை இல்லை. ஒவ்வொரு ஆண்டும்,
கணிசமான அளவுக்கு, ஆசிரியர்கள்
ஓய்வு பெறுகின்றனர். இந்த பணியிடங்களை,
உடனுக்குடன் நிரப்பி விடுகின்றனர்.
இதன்மூலம், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஆசிரியர்
பணியிடம் குறையாமல்,
அப்படியே உள்ளது.ஆனால், அரசு பள்ளிகளில்
சேரும் மாணவர் எண்ணிக்கை,
ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது.
அதிகாரிகளிடம் கேட்டால், 'இல்லவே இல்லை...
கடந்த ஆண்டை விட, மாணவர்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது' என,
ஏதாவது ஒரு புள்ளி விவரங்களை தருவர்.
மாணவர்கள் எண்ணிக்கை குறைவது தான்,
உபரி ஆசிரியர் வருவதற்கு காரணம்.
அதிகாரிகள் வாதப்படி, மாணவர்
எண்ணிக்கை அதிகரித்தால், உபரி ஆசிரியர்
என்ற பிரச்னையே வராதே? பின்,
எப்படி வருகிறது?ஒரு பக்கம், தனியார்
பள்ளிகளை, அரசே ஊக்கப்படுத்துகிறது.
புதிய, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், புற்றீசல்போல்
வருகின்றன. மெட்ரிக் பள்ளிகளும், புதிதாக
வந்து கொண்டே இருக்கின்றன. அந்த
பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை,
ஒவ்வொரு ஆண்டும், 'ஜெட்' வேகத்தில்
எகிறுகிறது. இதற்கு, நேர் மாறான நிலை,
அரசு பள்ளிகளில் காணப்படுகிறது.
கேள்விக்குறி
அரசு பள்ளிகளில், மாணவர்
சேர்க்கை குறைந்து வந்தால்,
அரசு பள்ளிகளின்
எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.
ஆசிரியர் நியமனமும், சந்தேகமாகி விடும்.
அரசு பள்ளிகளின் தரத்தை வலுப்படுத்தி,
மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த,
அரசு முன்வர வேண்டும். இவ்வாறு,
அண்ணாமலை கூறினார்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்
கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக்
ரைமாண்ட் கூறியதாவது:கடந்த, 2013 ஆகஸ்ட்
இறுதியில் இருந்த மாணவர்கள்
எண்ணிக்கை அடிப்படையில், உபரி ஆசிரியர்
கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
அதன்படியே, தற்போது, பணியிட மாறுதல்
கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.வரும் ஆகஸ்ட்
இறுதி வரை, அரசு பள்ளிகளில், மாணவர்கள்
சேர்க்கை நடக்கும். எனவே, ஆகஸ்ட்
இறுதி நிலவர அடிப்படையிலேயே,
உபரி ஆசிரியர்களை கணக்கிட
வேண்டும்.கடந்த ஆண்டு, செப்டம்பர், 1ம்
தேதி நடத்த வேண்டிய, உபரி ஆசிரியர்
கலந்தாய்வை, இப்போது நடத்துவது சரியாக
இருக்காது.இவ்வாறு, பேட்ரிக் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து,
கல்வித்துறை வட்டாரம் கூறுகையில்,
'அரசு பள்ளிகளில், மாணவர்கள்
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது;
குறையவில்லை. ஒரு பள்ளியில், கூடுதலாக
உள்ள ஆசிரியரை, பற்றாக்குறை உள்ள
பள்ளிகளுக்கு மாற்றுகிறோம்; அவ்வளவு தான்'
என்றது.
அரசு செய்ய வேண்டியது என்ன?
*உபரி ஆசிரியர் பிரச்னையை தீர்க்க,
அரசு பள்ளிகளில், மாணவர்கள்
சேர்க்கையை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க
வேண்டும். இல்லை எனில், ஆசிரியர் -
மாணவர் விகிதாசாரத்தை குறைக்க வேண்டும்.
*தற்போது, 1 முதல்,5ம் வகுப்பு வரை,
ஒரு ஆசிரியருக்கு, 30 மாணவர், 6 முதல், 8ம்
வகுப்பு வரை, ஒரு ஆசிரியருக்கு, 35
மாணவர், 9, 10ம் வகுப்புகளில்,
ஒரு ஆசிரியருக்கு, 40 மாணவர் என்ற
விகிதாசாரம், நடைமுறையில் உள்ளது.
*ஆசிரியர் தேர்வில், தென் மாவட்டத்தினர்,
அதிகளவில் தேர்வு பெறுகின்றனர். தென்
மாவட்டங்களில், காலி பணியிடம் இல்லாததால்,
வட மாவட்டங்களில், பணி நியமனம்
செய்யப்படுகின்றனர்.
* அதன்பின், யாரையாவது பிடித்து, தென்
மாவட்டங்களுக்கு சென்று விடுகின்றனர்.
இதனால், வட மாவட்ட அரசு பள்ளிகளில்,
தொடர்ந்து ஆசிரியர் பணியிடம் காலியாக
உள்ளது. இதனால், வட மாவட்டங்களின்
கல்வித்தரமும், மோசமாக உள்ளது.
*எனவே, ஆசிரியர் நியமனம், ஆசிரியர் -
மாணவர் விகிதாசார கொள்கை, வட
மாவட்டங்களில், ஆசிரியர் காலி பணியிடம்
ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வதற்கான
வழிமுறைகள் குறித்து, தமிழக அரசு,
முழுமையாக ஆய்வு செய்து, உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment