Thursday, July 03, 2014

1 முதல் 4ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் கற்றல் அட்டைகள்

ஒன்று முதல் 4ம் வகுப்பு வரை படிக்கின்ற அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் கற்றல்
அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1
முதல் 4ம் வகுப்பு வரையுள்ள மாணவ-
மாணவியருக்கு எளிமைப்படுத்தப்பட்ட
செயல்வழி கற்றல் முறையில்
வகுப்பறை நிகழ் வுகள் நடைபெற்று வருகிறது.
2011-12ம் கல்வியாண்டில்
அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு செட் வீதம் கற்றல்
அட்டைகள் வழங்கப்பட்டன. தற்போது 2014-15ம்
கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கற்றல்
அட்டைகள் மீண்டும் வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக தேவைப்படும் கற்றல் அட்டைகள்
தொடர்பான எண்ணிக்கைக்காக பள்ளிகளில்
மாணவர்கள்
எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வருகிறது. தமிழ்
வழி கல்வி பயில்கின்ற மாணவ-மாணவியர்
மட்டும் இந்த கணக்கில்
எடுத்துக்கொள்ளப்படுகின்றனர். கடந்த மாதம் 30ம்
தேதி நிலவரப்படி மாநில திட்ட இயக்குநர்
அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்
என்று கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment