தமிழகத்தில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும்கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கல்வி கற்பதற்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்
கூடாது
என்ற உயரிய நோக்கிலும் முதலமைச்சர்கூடாது
ஜெயலலிதா தலைமையிலான
அரசு கட்டணமில்லா கல்வி, பேருந்து பயண
அட்டைகள், மிதி வண்டிகள், சீருடைகள், பாடப்
புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி,
கல்வி உபகரணப் பொருட்கள், காலணிகள்,
இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகை போன்ற
பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை சீரிய
முறையில் செயல்படுத்தி வருகிறது.
ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்பேரில்
தேவைக்கேற்ப ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் தரமான
கல்வி வழங்கப்பட்டதால் கடந்த
மூன்று ஆண்டுகளாக 12 மற்றும் 10-ம்
வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவிகிதம்
படிப்படியாக உயர்ந்து 2014-ம்
ஆண்டு பொதுத்தேர்வில் முறையே 90.6 மற்றும் 90.7
சதவிகிதத்தை எட்டி, ஒரு சரித்திரம்
படைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டின்
பள்ளிக் கல்வித் துறையின் வரலாற்றில்
முத்திரை பதிக்கும் விதத்தில் 10-ம்
வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளில்
பயின்ற மாணவ மாணவியர் முதன்முறையாக முதல்
மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை, சமூக நலம் மற்றும்
சத்துணவு திட்டத்துறை, ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை,
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும்
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆகிய
ஆறு துறைகளால் நடத்தப்படும் பள்ளிகளில்
பயின்று 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்
தேர்வுகளில் தமிழை மொழிப் பாடமாகக்
கொண்டு மாநில அளவில் 42 மாணவ, மாணவியர்
முதலிடத்தையும், 184 மாணவ மாணவியர்
இரண்டாம் இடத்தையும், 382 மாணவ மாணவியர்
மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் 10-ம் வகுப்பு மற்றும் 12--ம்
வகுப்பில் தமிழை ஒரு பாடமாகக்
கொண்டு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக
மதிப்பெண்களைப் பெற்று, மாநில அளவில் முதல்
மூன்று இடங்களைப் பெறும் மாணவ
மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசுகள், பாராட்டுச்
சான்றிதழ்கள் வழங்கி அவர்களின்
மேற்படிப்புகளுக்கான செலவினையும்
தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்கிறது. 2013-2014-ம்
கல்வியாண்டில் 10-ம் வகுப்பில்
தமிழை ஒரு பாடமாகக் கொண்டு அரசு பொதுத்
தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற
19 மாணவ மாணவிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய்
ரொக்கப்
பரிசுகளை செல்வி ஜெ ஜெயலலிதா வழங்கினார்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயின்ற
மாணவ மாணவியர்களுக்குள், மாநில அளவில்
முதல் இடத்தைப் பெற்ற 3 மாணவ
மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்
பரிசு; மாற்று திறனாளிகள் நலத் துறையின் கீழ்
இயங்கும் பார்வையற்றோருக்கான பள்ளிகளில்
பயின்ற மாணவ மாணவியர்களுக்குள், மாநில
அளவில் முதல் இடத்தைப் பெற்ற மாணவன் மற்றும்
செவித்திறன் குறைந்தோருக்கான பள்ளிகளில்
பயின்ற மாணவ மாணவியருக்குள் மாநில அளவில்
முதல் இடம் பெற்ற மாணவி ஆகியோருக்கு தலா 25
ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு; சமூக நலம் மற்றும்
சத்துணவுத் திட்டத்துறையின் கீழ் இயங்கும்
அரசு குழந்தைகள் காப்பகங்கள் மற்றும்
அரசு சேவை இல்லங்களில் பயின்ற மாணவ
மாணவியர்களுக்குள், மாநில அளவில் முதல்
இடத்தைப் பெற்ற 2 மாணவிகளுக்கு தலா 5 ஆயிரம்
ரூபாய் ரொக்கப் பரிசு; வனத்துறையின் கீழ்
இயங்கி வரும் பள்ளிகளில் பயின்ற
மாணவர்களுக்குள், மாநில அளவில் முதல்
இடத்தைப் பெற்ற மாணவன் மற்றும்
மாணவியர்களுக்குள் மாநில அளவில் முதல் இடம்
பெற்ற மாணவிக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்
பரிசு; என ஆக மொத்தம் 10- ஆம்
வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில்
முதல் இடத்தைப் பெற்ற 28 மாணவ,
மாணவிகளுக்கு 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்
ரொக்கப் பரிசு; 2013-2014ம் கல்வியாண்டில், 12-
ஆம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாகக்
கொண்டு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில்
முதல் இடத்தைப் பெற்ற மாணவிக்கு 50 ஆயிரம்
ரூபாய் ரொக்கப் பரிசு; பிற்படுத்தப்பட்டோர், மிக
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயின்ற
மாணவர்களுள் மாநில அளவில் முதல் இடத்தைப்
பெற்ற மாணவன் மற்றும் மாணவியர்களுள் மாநில
அளவில் முதல் இடம் பெற்ற மாணவிக்கு தலா 50
ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு; ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ்
இயங்கும் பள்ளிகளில் பயின்ற மாணவ
மாணவியர்களுக்குள் மாநில அளவில் முதல்
இடத்தைப் பெற்ற 2 மாணவிகள் மற்றும்
ஒரு மாணவருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்
பரிசு; மாற்று திறனாளிகள் நலத் துறையின் கீழ்
இயங்கும் பார்வையற்றோருக்கான பள்ளிகளில்
பயின்ற மாணவ மாணவியர்களுக்குள், மாநில
அளவில் முதல் இடத்தைப் பெற்ற மாணவி மற்றும்
செவித் திறன் குறைந்தோருக்கான பள்ளிகளில்
பயின்ற மாணவ மாணவியர்களுக்குள் மாநில
அளவில் முதல் இடம் பெற்ற 2 மாணவிகள்
ஆகியோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்
பரிசு; சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்
துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள்
காப்பகங்கள் மற்றும் அரசு சேவை இல்லங்களில்
பயின்ற மாணவ மாணவியர்களுக்குள் மாநில
அளவில் முதல் இடத்தைப் பெற்ற 2
மாணவிகளுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் ரொக்கப்
பரிசு; வனத்துறையின் கீழ் இயங்கி வரும்
பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர்களுக்குள்
மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற
ஒரு மாணவி மற்றும் 2 மாணவர்களுக்கு தலா 50
ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு; என 12-ஆம்
வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில்
முதல் இடத்தைப் பெற்ற 14 மாணவ,
மாணவிகளுக்கு 4 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்
ரொக்கப் பரிசு; என மொத்தம், 2013-2014 ஆம்
கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம்
வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில
அளவில் முதல் இடங்களைப் பெற்ற 42 மாணவ
மாணவிகளுக்கு 11 லட்சத்து 7 ஆயிரம்
ரூபாய்க்கான ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச்
சான்றிதழ்களை ஜெயலலிதா வழங்கியதோடு,
""""உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த
வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள்
அனைவருக்கும் மிக ஒளிமயமான எதிர்காலம்
அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்""
என்று வாழ்த்தினார். ஜெயலலிதாவிடம் ரொக்கப்
பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களைப் பெற்றுக்
கொண்ட மாணவ மாணவிகள் தங்களைப்
பாராட்டி ரொக்கப்
பரிசு வழங்கி ஊக்குவித்தமைக்காக
தங்களது நெஞ்சார்ந்த
நன்றியினை முதலமைச்சருக்குதெரிவித்துக்
கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில், சமூகநலம்
மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர்
பா.வளர்மதி, ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்
என்.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் கே.சி. வீரமணி,
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்,
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், தலைமைச்
செயலாளர் திருமோகன் வர்கீஸ் சுங்கத்,
தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன்,
பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபிதா,
மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment