திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்
தொலைநிலைக் கல்வி மையத்தில்
பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட்.
தொலைநிலைக் கல்வி மையத்தில்
பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட்.
விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம்
தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்
துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார்
சனிக்கிழமை வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:பல்கலைக்கழகத்
தொலைநிலைக் கல்வி மையத்தில்
முதுகலை கல்வியியல் (எம்.எட்)
படிப்பு மாணவர் சேர்க்கைக்கான
விண்ணப்பம் ஜூன் 30-ம் தேதி முதல்
வழங்கப்பட்டு வருகிறது.அரசு அங்கீகாரம்
பெற்ற பள்ளிகளில் பி.எட். பாடத்தில் 50
சதவிகித மதிப்பெண்கள் பெற்று, 2
ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த
ஆசிரியர்கள் மட்டுமே இப்படிப்பில் சேர
தகுதியுடையவர்கள்.
பல்கலைக்கழகத் தொலைநிலைக்
கல்வி மையம், உறுப்புக் கல்லூரிகள்,
அனைத்துப் பயிற்சி மையங்கள்,
படிப்பு மையங்களில் ரூ.500-க்கான
வங்கி வரைவோலையை அளித்து
விண்ணப்பங்களைப் பெற்றுக்
கொள்ளலாம்.விண்ணப்பங்களை
பல்கலைக்கழக வலைதளத்தின் http://
www.bdu.ac.in/cde_admission.php மூலம்
பதிவிறக்கம் செய்து கொள்பவர்கள்
ரூ.500-க்கான
வங்கி வரைவோலையையும்
சேர்த்து அனுப்ப
வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை ஜூலை 31-ம்
தேதிக்குள் அளிக்கலாம்
என்று ஏற்கெனவே
தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,
விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம்
தேதி கடைசிநாளாக
நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும்
நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 31-ம்
தேதி நடைபெறும்.
No comments:
Post a Comment