Wednesday, July 02, 2014

தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கான ஒற்றைச் சாளர ஆன்-லைன் கலந்தாய்வை ஜூலை 7-ஆம் தேதி முதல் ஜூலை 15 வரை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

தொடக்கக் கல்வி ஆசிரியர்
டிப்ளமோ படிப்புக்கான ஒற்றைச் சாளர
ஆன்-லைன் கலந்தாய்வை ஜூலை 7-ஆம்
தேதி முதல் ஜூலை 15 வரை நடத்த
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த
கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல்,
அழைப்புக் கடிதம் ஆகியவை மாநிலக்
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனத்தின்
ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீங்ழ்ற்.ர்ழ்ஞ் என்ற
இணையதளத்தில்
புதன்கிழமை (ஜூலை 2) வெளியிடப்பட
உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர்கள் இந்த
இணையதளத்திலிருந்து தங்களுக்கான
அழைப்புக் கடிதங்களைப் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம். ஆசிரியர்
டிப்ளமோ படிப்புகளுக்கான விண்ணப்ப
விநியோகம் மே 14 முதல் ஜூன் 9
வரை நடைபெற்றது. மொத்தம் 4,520 பேர்
இந்தப் படிப்பில் சேர
விண்ணப்பித்துள்ளனர். இந்த
கலந்தாய்வை நடத்த தமிழக அரசிடம்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம்
அனுமதி கோரியிருந்தது. இந்தப்
படிப்புக்கான ஒற்றைச் சாளர
கலந்தாய்வை ஜூலை 7 முதல் 15
வரை ஆன்-லைன் முறையில் நடத்த
தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதில் ஞாயிற்றுக்கிழமையான
ஜூலை 13-ஆம்
தேதி கலந்தாய்வு நடைபெறாது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்
அலுவலகங்களிலும், அந்த
அலுவலகத்தால் குறிப்பிடப்படும்
இடங்களிலும் ஆன்-லைன்
கலந்தாய்வு நடத்தப்படும். அந்தந்த
மாவட்டத்தில்
விண்ணப்பித்தவர்களுக்கு அந்தந்த
மாவட்டத்திலேயே கலந்தாய்வு நடத்தப்படு
ம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment