கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் தங்கி அங்குள்ள தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்களில் பணியாற்றி வருகிறார்கள்.
மேலும் ஏராளமானோர் அங்குள்ள ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களிலும் வேலை செய்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் அங்குள்ள தமிழ்வழி பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.
தமிழ்வழி கல்வி பயிலும் மாணவ–மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதற்காக தினச்சம்பள அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இடுக்கி மாவட்டத்தில் தமிழ்வழி பள்ளிகளில் கற்றுக்கொடுக்கும் தற்காலிக ஆசிரியர்கள் 87 பேரை திடீரென பணி நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நடவடிக்கை தற்காலிக ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. இதுபற்றி அவர்கள் தெரிவிக்கும்போது, ‘கேரள அரசு எடுத்த இந்த நடவடிக்கைக்கான காரணம் தெரியவில்லை. இந்த நடவடிக்கையால் தமிழ்வழி கல்வி பயிலும் மாணவ–மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது’ என்றனர்.
No comments:
Post a Comment