பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டில், புதிதாக 5 ஐ.ஐ.டி.,கள் மற்றும் 5 ஐ.ஐ.எம்.,கள்மற்றும் 12 புதிய மருத்துவ கல்லூரிகள்
ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில்ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட
கல்வித்துறை தொடர்பான
அறிவிப்புகள்
* நாட்டில், புதிதாக 5 ஐ.ஐ.டி.,கள் மற்றும்
5 ஐ.ஐ.எம்.,கள் அமைக்கப்படும்
* பல் மருத்துவ வசதியுடன் கூடிய, 12
கூடுதல் அரசு மருத்துவ கல்லூரிகள்
ஏற்படுத்தப்படும்
* வேலை வாய்ப்பை பெறுவதற்கான
பயிற்சிகளையும், உதவிகளையும்
வழங்கும் திறன் இந்தியா திட்டம்(Skill India
Programme) விரைவில் அறிமுகம்
* நாட்டிலுள்ள அனைத்து மகளிர்
பள்ளிகளிலும், தேவையான
கழிப்பறை மற்றும் குடிநீர்
வசதி ஏற்படுத்துவதற்கு தேவையான
நிதி ஒதுக்கப்படும்
* பெண் குழந்தைகளின் கல்விக்கான,
தொழில்நுட்ப
மேம்பாட்டு நிதி திட்டத்தின்
மேம்பாட்டிற்காக ரூ.100
கோடி ஒதுக்கீடு
* ஹிமாலயன் படிப்புகளுக்கான தேசிய
மையத்தை உத்ரகாண்ட் மாநிலத்தில்
அமைக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு
* ஆந்திரா மற்றும் ராஜஸ்தான்
மாநிலங்களில், புதிய வேளாண்
பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்படும்
* தெலுங்கானா மற்றும்
ஹரியானா மாநிலங்களில் புதிய
தோட்டக்கலை பல்கலைக்கழகங்கள்
ஏற்படுத்தப்படும்
* நாட்டின்
இளைஞர்களிடையே தலைமைத்துவப்
பண்பை வளர்க்கும்பொருட்டு, இளம்
தலைவர்கள் திட்டத்தை(Young Leaders
Programme) உருவாக்க, ரூ.100
கோடி ஒதுக்கீடு
* மணிப்பூர் மாநிலத்தில் புதிதாக
விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்க,
ரூ.100 கோடி ஒதுக்கீடு
* எதிர்வரும் ஆசிய விளையாட்டுப்
போட்டிகளை முன்னிட்டு,
விளையாட்டு வீரர்களுக்கு
பயிற்சியளிக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு
* வெகு விரைவில், நாட்டில், தேசிய
விளையாட்டு ஆணையம்
அமைக்கப்படுவதோடு, காஷ்மீர்
மாநிலத்தில் சர்வதேச தரத்திலான
விளையாட்டு மையங்களும்
உருவாக்கப்படும்
* புனேவிலுள்ள எப்.டி.ஐ.ஐ.,
கொல்கத்தாவிலுள்ள எஸ்.ஆர்.எப்.டி.ஐ.,
ஆகியவை, தேசிய முக்கியத்துவம்
வாய்ந்த கல்வி நிறுவனங்களாக தரம்
உயர்த்தப்படும்.
* முஸ்லீம் மத கல்வி நிறுவனமான
மதரஸாக்களை நவீனமாக்க, ரூ.100
கோடி ஒதுக்கீடு
* லோக் நாயக் ஜெய்ப்பிரகாஷ் நாராயண்
பெயரில், மத்திய பிரதேச மாநிலத்தில்
ஒரு உயர்மதிநுட்ப மையம்(Centre of
Excellence) அமைக்கும் திட்டம்
* ஆசிரியர் பயிற்சிக்கான மதன் மோகன்
மாளவியா திட்டம்
* பருவநிலை மாற்றத்தைப்
பற்றி ஆய்வுசெய்ய புதிய
ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும்
* பொதுத்துறை மற்றும் தனியார்
பங்களிப்புடன், கைவினைக் கலைகள்
தொடர்பான
ஹஸ்ட்கலா அகடமியை மேம்படுத்த திட்டம்
* சமூக
ரேடியோ மையங்களுக்கு(Community Radio
Centres), ரூ.100 கோடி ஒதுக்கீடு
* தேசிய கிராமப்புற இணையம் மற்றும்
தொழில்நுட்ப திட்டத்திற்கு ரூ.500
கோடி ஒதுக்கீடு
No comments:
Post a Comment