Saturday, July 19, 2014

தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை முறையாக அமலாகவில்லை பாலபாரதி குற்றச்சாட்டு

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்தில் சமச்சீர்கல்வி முறை முறையாக அமலாகவில்லை என்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத்தலைவர்
கே.பாலபாரதி வலியுறுத்தினார்.
வியாழனன்று
பேரவையில் பள்ளிக்கல்வி,
உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கைள் மீதான
விவாதத்திற்கு அமைச்சர்கள் பதில் அளித்த
பின்னர் இதனை அவர் தெரிவித்தார். அவர் மேலும்
பேசியதாவது:
ஆசிரியர் தகுதித் தேர்வில் 38ஆயிரம்
ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில்
10ஆயிரம் பேரைத்தான் அரசு தேர்வுசெய்ய உள்ளது.
அவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இந்த வெயிட்டேஜ்
மதிப்பெண்ணுக்கு பிளஸ்
டு மதிப்பெண்ணை கணக்கில்
எடுத்துக்கொள்ளக்கூடாது. பட்டப்படிப்பு,
ஆசிரியர் பயிற்சி படிப்பு,
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, தனியார்
பள்ளியில் பணிபுரிந்திருந்தால் அந்த அனுபவம்,
ராணுவ வீரர்களின் வாரிசுகள், உடல் ஊனமுற்றோர்
என்ற சமூக பார்வையில் வெயிட்டேஜ் மதிப்பெண்
நிர்ணயிக்கப்படவேண்டும். இப்படி செய்தால்தான்
அது உண்மையான தேர்வாக இருக்கமுடியும்
என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment