Thursday, July 31, 2014

பட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் பட்டியல், இன்றாவது வெளியிடப்படுமா?

பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது.பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வில் (2-வது தாள்) தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 43,243 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதா ரர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்ணை உறுதிப்படுத்திக்கொண்டனர்.வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மாற்றம் வந்தவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளி யிடப்பட்டதை தொடர்ந்து, இறுதி தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் திருந்தது. 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


தேர்வுப் பட்டியல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறும்போது, ‘‘இறுதிதேர்வுப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் வெளியிடப்பட லாம். ஒருவேளை புதன்கிழமை வெளியிடப்படாவிட்டால் மறுநாள் அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி கட்டாயம் வெளியிடப்படும்’’ என்றார்.

No comments:

Post a Comment