Friday, July 04, 2014

பள்ளிகளில் கம்ப்யூட்டர் இல்லை: தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர்
வசதியின்றி தலைமை ஆசிரியர்கள்
அரசு உத்தரவுகளை பெற முடியாமல்
தவிக்கின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு,சைக்கிள்,லேப்-
டாப்,புத்தகங்கள் வழங்குவது,10,12
ம்வகுப்பு முடித்த
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு செய்து அட்டை வழங்குவது உள்ளிட்ட
பணிகளை தலைமை ஆசிரியர் செய்ய
வேண்டும்.இது சம்பந்தமாக அரசு, மாவட்ட
கல்வி அலுவலக உத்தரவுகள் அனைத்தும் மின்
அஞ்சல் மூலம்
தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்படுகிறது.
முற்றிலும் கிராமப்புறத்தை வலசபட்டி,
அணியம்பட்டி, செல்லியம்பட்டி உள்ளிட்ட பல
பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதியில்லை.
தலைமை ஆரியர்கள் பள்ளி நேரம் முடிந்ததும்
தினமும் அருகில் உள்ள நகர்
பகுதிக்கு சென்று அரசு உத்தரவுகளை தனியார்
கம்ப்யூட்டர் மையங்களில் பதிவிறக்கம்
செய்து தெரிந்து கொள்கின்றனர். இதனால் பணம்,
காலவிரையம் ஆகிறது. அரசின்
உத்தரவு தலைமை ஆசிரியர்களுக்கு உடனே கிடைக்காமல்
பல்வேறு சிரமத்திற் குள்ளாகின்றனர்.தகவல்
தெரிவிக்கும் தபால் முறை மாற்றபட் டுள்ள
நிலையில் அரசு, அனைத்து பள்ளிகளுக்கும் இன்டர்
நெட் வசதியுடன் கம்ப்யூட்டர் வழங்க வேண்டும்
என மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment