தமிழ்நாடு அனைத்து வள மைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க பொதுக் குழு கூட்டம் விழுப்புரம் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் நடந்தது.
மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மரியபிரகாசம் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சம்பத், சங்க
செயல்பாடுகள் குறித்து பேசினார்.
தமிழகத்திலுள்ள 4, 587 ஆசிரியர்
பயிற்றுனர்களையும் ஒட்டு மொத்தமாக கட்டாய
மாறுதல் செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்
வழக்குத் தொடர்வது, கடந்த ஜன.,1ம் தேதி முதல்
மார்ச் மாதம் வரை அகவிலைப்படி நிலுவைத்
தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
லோக்சபா தேர்தலில் மண்டல அலுவலர்களாக
பணிபுரிந்தவர்களுக்கு ஊதியத் தொகை வழங்க
வலியுறுத்தி இன்று (15ம் தேதி) மாவட்டத்
தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்துவது உட்பட பல தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment