Sunday, July 06, 2014

விரைவில் புதிய சி.இ.ஓ., பட்டியல்

கல்விதுறையில் காலியாக உள்ள
பணியிடங்களை நிரப்பும் வகையில்,
விரைவில் புதிய முதன்ைம
கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்)
பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில்
முதன்மை கல்வி அலுவலர்கள்
(சி.இ.ஓ.,க்கள்),
அவர்களுக்கு இணையான நிலையில்
உள்ள கூடுதல்
முதன்மை கல்வி அலுவலர்கள், கடந்த
மே 31, மற்றும் ஜூன் 30 ல்
பணி ஓய்வு பெற்றனர்.
தற்போது 12 க்கும் மேற்பட்ட
முதன்மை கல்வி அலுவலர்
பணியிடம் காலியாக உள்ளது.இந்த
பணியிடங்களை நிரப்ப,
பணிமூப்பு அடிப்படையில்
பதவி உயர்வு பட்டியல், பணியிட
மாற்றம் பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்
முதல் வாரத்திற்குள் சி.இ.ஓ.,க்கள்
பதவி உயர்வு மற்றும் பணியிட
மாறுதல் பட்டியல் வெளியிடப்படும்,
என கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.

No comments:

Post a Comment