Saturday, July 19, 2014

பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை சில துளிகள்

பள்ளிக்கல்வித்துறைமானியக்கோரிக்கையின்போது அமைச்சர் வீரமணி அளித்துள்ள ப்திலுரை 
கடந்த மூன்று ஆண்டுகளில் 53,288
ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரே நாளில்
20920 பணி நியமன ஆணைகளை முதல்வர்
ஜெயலலிதா வழங்கினார். பல ஆண்டுகளாக காலிப்
பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த
நிலையை மாற்றி 20,025
பணியிடங்களை ஏற்படுத்தின ார்கள். அதில் இந்நாள்
வரை 10,780 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
மீதமுள்ள ஆசிரியர் பணியிடங்களும்,
ஆசிரியரல்லாத பணியிடங்களும் விரைவில்
நிரப்பப்படும்.
உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப்
பேரவையில் நடந்த விவாதத்திற்கு அமைச்சர்
பழனியப்பன் பதிலளித்து பேசியதாவது:
10 பொறியியல் கல்லூரிகளில் காணொலிக்
காட்சி ஒளிபரப்பு மையங்கள் ரூ.30 லட்சம்
செலவில் நிறுவப்படும். தொலைதூர மற்றும்
கிராமப்புறங்களிலுள்ள கல்வி நிறுவனங்களில்
பயிலும் மாணவ, மாணவியர் அறிவு சார்ந்த
பலன்களைப் பெற இவை வழிவகுக்கும். சென்னைப்
பல்கலைக்கழகத்தில் 51 துறைகளில் 95
உதவிப்பேராசிரியர் பணியிடங்கள்
நிரப்பபட்டுள்ளன. 15 பேராசிரியர் பணியிடங்கள்
நிரப்பப்பட உள்ளன. இதேபோல்
பல்வேறு பல்கலை கழகங்களில் பேராசிரியர்கள்
பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கலை மற்றும்
அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல்
கல்லூரிகளில் 1093 உதவிப்பேராசிரியர்
பணி யிடங்கள் நிரப்பிட ஆணையிடப்பட்டது.
வருகிற ஆகஸ்டு முதல் வாரத்தில் நேர்காணல்
நடத்தப்படும். 2013&14ம் கல்வியாண்டில்
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும்
கல்வியியல் கல்லூரிகளில், 513
உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பிடத்
தேர்வு வாரியத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கலை அறிவியல் கல்லூரிகளில்
1093 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்
10,000 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை
அவைக்கு வெளியே மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம்
கூறியதாவது:
அவையில் அதிமுக உறுப்பினர்
ராஜலட்சுமி பேசும்போது, மானிய
கோரிக்கை குறித்து எதுவும் பேசாமல்
எதிர்க்கட்சி வரிசையில் இருந்த திமுக, தேமுதிக,
இன்னும் சில கட்சிகளை கொச்சைப்படுத்தி,
விமர்சித்து அவையில் இடம் பெற கூடாத
கேவலமான வார்த்தைகளை எல்லாம் அவரது பேச்சில்
குறிப்பிட்டார். அதற்கு எங்கள் கட்சி சார்பில்
எதிர்ப்பு தெரிவித்தோம். திமுக சட்டமன்ற துணைத்
தலைவர் துரைமுருகன், இதுகுறித்து சபாநாயகரிடம்
விளக்கம் கேட்டார்.
அதற்கு அமைச்சர் வைத்தியலிங்கம்,
�அதை பற்றி பேச உங்களுக்கு தகுதி கிடையாது�
என்றார். தான் ஒரு அமைச்சர் என்பதை மறந்து,
ஓடுகாலி என்று எதிர்கட்சிகளை எல்லாம்
சொல்லி அதையே பதிவு செய்து வைத்துள்ளார்கள்.
எங்களுக்கு என்ன
தகுதி இருக்கிறது என்று அமைச்சர் கூறிய அந்த
வார்த்தையை, அவை குறிப்பில் இருந்து நீக்க
அனுமதி கேட்டோம். ஆனால் சபாநாயகரோ,
எப்போதும் போல, சர்வாதிகார
தன்மையோடு எங்களை அவையில்
இருந்து வெளியேற்றி விட்டார்.
முதல்வரின் துதிபாடும் மன்றமாக
சட்டசபை நடந்து வருகிறது. அதிமுக கூட்டம்
நடைபெறுவதை போன்று அமைச்சர்கள்
பேசி வருவது வெட்கப்பட வேண்டிய ஒன்று.
சபாநாயகரின் செயலை நாங்கள் கண்டிக்கிறோம்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

No comments:

Post a Comment