Wednesday, September 03, 2014

ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் 18 பேர் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், கடந்த மே மாதம் 30ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.இம்முறையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, ஆசிரியர் தேர்வு வாரியம் கவுன்சிலிங் நடத்த தடையில்லை என்றும், பணி நியமனங்கள் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment