Friday, September 05, 2014

ஆசிரியர் நியமனத் தடைக்கு எதிராக மனு: அவசர வழக்காக விசாரிக்க மதுரை நீதிமன்றம் மறுப்பு

ஆசிரியர்கள் நியமனத் தடைக்கு எதிரான
மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம்
மறுப்பு தெரிவித்துள்ளது.
மேல்முறையீட்டு மனுவை தமிழக
அரசு நாளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக்
கிளை உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதியின்
உத்தரவு கிடைக்கவில்லை என 2 நீதிபதிகள்
கொண்ட அமர்வு விளக்கமளித்தது.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்
நியமனத்துக்கு நேற்று தனி நீதிபதி சசிதரன்
தடை விதித்தார். தனி நீதிபதியின்
உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில்
வழக்கறிஞர் சோமையாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.

No comments:

Post a Comment