Tuesday, September 02, 2014
ஆசிரியர் தின விழா பெயரில் மாற்றம் இல்லை: கல்வித்துறை திட்டவட்டம்
'தமிழகத்தில் நடக்கும் ஆசிரியர் தின விழா பெயரில், எவ்வித மாற்றமும் கிடையாது; வழக்கம்போல், இந்த ஆண்டும், ஆசிரியர் தின விழா, வரும் 5ம் தேதி, சிறப்பாக கொண்டாடப்படும்' என, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, தேசிய அளவில், ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக பணிபுரியும் ஆசிரியருக்கு, மத்திய, மாநில அரசுகள், விருதுகளை வழங்குகின்றன. இந்நிலையில், ஆசிரியர் தின விழா பெயரை, சமீபத்தில், 'குரு உத்சவ்' என, மாற்றி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டதாக, தகவல் வெளியானது. மாநில அரசுகளும், புதிய பெயரில், விழாவை கொண்டாட வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. வரும், 5ம் தேதி மாநில அரசுகளும், மத்திய அரசும், சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்க உள்ளது. தமிழகத்திலும், விழாவுக்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடந்து வருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment