Wednesday, October 01, 2014

10-ம் வகுப்பு தேர்வு தொடங்கும் நேரத்தை மாற்றம் செய்யக் கூடாது: பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

கிராமப்புற மாணவர்களின்
நலனை கருத்தில் கொண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கும் நேரத்தை மாற்றக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்
கழகத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
மன்னார்குடியில் அண்மையில்
நடைபெற்றது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வரும் கல்வி ஆண்டில் 10-ம்
வகுப்பிற்கு முப்பருவ மற்றும் சிசிஇ
முறையில் ஏற்படும்
சிக்கல்களை கருத்தில்
கொண்டு நடைமுறையில் உள்ள
பொதுத்தேர்வு முறையையே தொடரவேண்டும்.
13 ஆயிரம்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு மூலம்
பணி வழங்க உள்ள தமிழக
முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
அரசு உதவிபெறும் தனியார்
பள்ளி ஆசிரியர்களுக்கு போனஸ்
உள்ளிட்ட அனைத்து பணப் பலன்களும்
காலதாமதமின்றி வழங்க வேண்டும்.
அனைத்து நோய்களுக்கும் மருத்துவக்
காப்பீடு வழங்க வேண்டும்.
2004-ம் ஆண்டு தொகுப்பூதியத்தில்
பணியேற்ற
ஆசிரியர்களுக்கு பணியேற்ற நாள்
முதல் பணிவரன்முறை செய்ய
வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்துசெய்துவிட்டு பழைய
ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த
வேண்டும்.
கூட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் எஸ்.
துரைராஜ் தலைமை வகித்தார். மாநில
அமைப்புச் செயலர் எஸ். கமலப்பன், மாவட்ட
பொருளாளர் ஆர். முத்துவேல்
முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்களை விளக்கி மாவட்டச் செயலர்
எஸ். அன்பரசு, மாவட்ட அமைப்புச் செயலர்
கருணாகாளிதாஸ் ஆகியோர் பேசினர்.

No comments:

Post a Comment