Friday, October 03, 2014

2-ம் பருவ புத்தகங்கள் அக்.,7ல் வழங்க உத்தரவு

இரண்டாம்பருவ இலவச பாட புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு அக்.,7ல் வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் அக்.,7ல் துவங்குகின்றன. 1 முதல் 9ம்வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு அன்றைய தினமே இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து ஏற்கனவே இரண்டாம் பருவத்திற்கான இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள், சீருடைகள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. அவை அங்கிருந்து பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டன. அவற்றை அக்.,7ல் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அப்பணிகளை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது,”என்றார்.


No comments:

Post a Comment