Tuesday, October 07, 2014

புதிய கல்விக் கொள்கைக்கு மக்களிடம் ஆலோசனை கேட்கப்படும்: ஸ்மிருதி இராணி

தேசிய அளவிலான புதிய கல்விக்
கொள்கையை உருவாக்குவதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்கும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

இது குறித்து அஸ்ஸாம் மாநிலம்
குவாஹாட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் அவர்
பேசியதாவது: புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக
நாங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் செல்லத்
திட்டமிட்டுள்ளோம்.
இந்தக் கொள்கையை உருவாக்குவதற்காக
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம்
இருந்து உரிய ஆலோசனைகள் பெறப்படும். மேலும் இந்தக்
கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும்
அவர்களிடம் விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்று
அவர் தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை அடுத்த ஆண்டு
முதல் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment