தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்
மூலம், தொழிற்கல்வி கணினி பயிற்றுநர்
பணி காலியிடத்திற்கு பரிந்துரை பட்டியல் அனுப்பப்பட உள்ளது.
மூலம், தொழிற்கல்வி கணினி பயிற்றுநர்
பணி காலியிடத்திற்கு பரிந்துரை பட்டியல் அனுப்பப்பட உள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மூலம்
652 தொழிற்கல்வி பயிற்றுநர்
(கம்ப்யூட்டர் இன்ஸ்ட்ரக்டர்)
காலி பணியிடத்திற்கு, மாநில அளவில்
பரிந்துரை செய்திடும்
பொருட்டு உத்தேச
பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யப்பட
உள்ளது.
இப்பணியிடத்திற்கு பி.எட்.,
கல்வி தகுதியுடன் பி.எஸ்.சி.,
கணினி அறிவியல் அல்லது பி.லிட்.,
கல்வித் தகுதியுடன் பி.சி.ஏ.,
அல்லது பி.எட்., கல்வித் தகுதியுடன்
பி.எஸ்.சி., தகவல் தொழில்நுட்பம்
அல்லது பி.எட்., கல்வித் தகுதியுடன்
பி.இ., படிப்பு, மேற்குறிப்பிட்ட கல்வித்
தகுதிகளில் ஒன்றை மாவட்ட
வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு செய்திருக்க வேண்டும்.
தேவையான கல்வித் தகுதியுடன்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
பதிந்தவர்கள், தங்களது பெயர், பட்டியலில்
இடம்
பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்திடலாம்
.
பதிவுதாரர்கள் அனைத்து கல்விச்
சான்றிதழ்கள் மற்றும்
வேலை வாய்ப்பு அட்டையுடன், வரும்
31ம் தேதிக்குள், மாவட்ட
வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு
நேரில் வந்து சரிபார்த்துக்
கொள்ளலாம். இத்தகவலை விழுப்புரம்
கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment