Sunday, October 05, 2014

அகவிலைப்படியை எதிர்பார்த்துகாத்திருக்கும் அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரித்திருப்பதற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாததால்
ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள்
ஆண்டுக்கு இரண்டு முறை ஊழியர்களுக்கான
அகவிலைப்படியைஉயர்த்தி அறிவிக்கும்.
நடப்பு ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான
அகவிலைப்படி உயர்வு 7 சதவீதமாக
அதிகரித்திருப்பதாக கடந்த மாதம்
அறிவிக்கப்பட்டது.
மாநில அரசு ஊழியர்களுக்கான
அகவிலைப்படி உயர்வு இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதனால் பத்து லட்சம் அரசு ஊழியர்களும்,
ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆறு லட்சம் பேரும்
பலத்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment