Friday, October 24, 2014

அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவி உயர்வு

அரசு நடுநிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
பணிமூப்பு அடிப்படையில் உதவி தொடக்கக்கல்வி அதிகாரி பதவி உயர்வு
அளிக்கப்படுகிறது.

அதன்படி அவர்களுக்கான
பதவி உயர்வு கலந்தாய்வு வருகிற 25-ம்
தேதி சென்னை டிபிஐ
வளாகத்தில் உள்ள தொடக்கக்
கல்வி இயக்குநர் அலுவலக
கூட்டரங்கில் காலை 10 மணிக்கு நடைபெற
உள்ளது.
பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில்
வரிசை எண் 31 முதல் 160
வரை உள்ளவர்கள் இக்கலந்தாய்வில்
கலந்து கொள்ளுமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கலந்தாய்வுக்கு வரும்போது,
தலைமை ஆசிரியர்களின்
முழுவிவரங்கள் அடங்கிய படிவத்தில்
புகைப்படம் ஒட்டி உதவி தொடக்கக்
கல்வி அதிகாரியின் மேலொப்பம்
பெற்றிருக்க வேண்டும்.
பணிமூப்பு அடிப்படையில்
தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு
வழங்கப்படும் என்று தொடக்கக்
கல்வி இயக்குனர் ஆர்.இளங்கோவன்
கூறியுள்ளார்.

No comments:

Post a Comment